முதல் இந்திய சுதந்திரப் போர்
முன்னுரை
ஆங்கிலேயர்களின்
அடக்குமுறைக் கொள்கைகளால், இந்தியாவில் 1857-ம் ஆண்டில் பெரும்
புரட்சி ஏற்பட்டது. இதைப் பற்றிய வரலாற்றை
சுருக்கமாக பார்ப்போம்.
****************
ஆங்கிலேயர்கள்
இந்தியாவின் பல இடங்களில் தங்கள்
வணிகத் தலங்களை நிறுவினர். அதன்
பின்னர் படிப்படியாக உள்நாட்டு விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தனர். அவர்களில்
வெல்லெஸ்லி பிரபு இந்திய மன்னர்களுடன்
செய்து கொண்ட துணைப்பைடத் திட்டங்கள்
மற்றும் டல்ஹவுசியின் வாரிசு இழப்பு கொள்கை
போன்றவற்றினால் இந்தியாவின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்தனர்.
ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பு
இதனால்,
இந்திய மன்னர்கள். ஆங்கிலேயர்கள் மீது வெறுப்படைந்தனர். மேலும்
ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் ஏழைகள் அதிகளவில் வரி
செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
நிலப்பிரபுக்கள் அனுபவித்து வந்த சலுகைகளும் பறிக்கப்பட்டன.
இதனால் அவர்கள் ஆங்கிலேயர்கள் மீது
கோபம் கொண்டனர்.
ஆங்கிலேயர்கள்
இந்தியர்களின் தொழில்களையும் உற்பத்திகளையும் முடக்கினர். அதனால் இந்திய கைவினைஞர்களும்,
நெசவாளர்களும் வேலை வாய்ப்பை இழந்தனர்.
பின்னர் அவர்களை ஆங்கிலேயர்கள் குறைந்த
கூலியில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
தொழில் புரிய கட்டாயப்படுத்தினர். இதனால்
நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களும் ஆங்கிலேயர்களை
எதிர்த்தனர்.
சிப்பாய்
கலகத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்தது.
ஆங்கிலேயர்களின் ராணுவக் கொள்கை. இந்தியாவில்
இருந்து ஆங்கிலேய ராணுப் படையில் இந்தியர்களே
அதிகம் இருந்தனர். அவர்களை ஆங்கிலேயர்கள் இழிவுப்படுத்தினர்.
அவர்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்திய சிப்பாய்கள் தங்கள் சமயம் மற்றும்
பண்பாட்டு வழக்கப்படி திலகமிடுதல், தாடி வளர்த்தல், தலைப்பாகை
அணிதல் போன்றவற்றில் இருந்து தடுக்கப்பட்டனர்.
சிப்பாய் கலகம்
குறிப்பாக,
ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய புதிய 'என்பீல்டு' ரக
துப்பாக்கிகளில் பசு மற்றும் பன்றியின்
கொழுப்பு, தோட்டாக்களில் தடவப்பட்டு இருந்ததாக கருதி, இந்திய படைவீரர்கள்
அத்தோட்டாக்களை உபயோகிக்க மறுத்தனர்.
இதனால்,
29.3.1857-ல் கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள பேரக்பூர்
என்ற இடத்தில் வங்காளப் படைப் பிரிவை சேர்ந்த
மங்கள் பாண்டே என்ற இந்திய
படை வீரர் அந்த துப்பாக்கியை
உபயோகிக்க மறுத்து தன் மேல்
அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அதனால்
அவர் கைது செய்யப்பட்டு பின்னர்
தூக்கில் இடப்பட்டார்.
இதைக்
கேள்விப்பட்ட இந்தியப் படை வீரர்கள் வெவ்வேறு
பகுதிகளில் புரட்சியை தொடங்கினர். இதுவே பின்னர் சிப்பாய்
கலகமாக உருவெடுத்தது. தொடந்தது ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்கள்.
முடிவுரை
ஆங்கிலேயர்கள்
இந்நாட்டை விட்டு வெளியேறும் வரை
அப்போராட்டங்கள் தொடர்ந்தன.
Comments
Post a Comment