தந்தை பெரியார்



முன்னுரை

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர், தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும் பகுத்தறிவு வாதமும் மிகவும் புகழ்பெற்றவை.

பிறப்பு

1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வெங்கட நாயக்கர் - முத்தம்மாள் என்கிற சின்ன தாயம்மாள். இவரின் இயற்பெயர் ஈரோடு வெங்கட்ராமசாமி நாயக்கர். தந்தை பெரியார், .வெ.ரா என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறார். சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப் பெயரை நீக்கி, அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.

காங்கிரசில் இணைதல்

1919-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். இதற்காக தான் வகித்து வந்த ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். அந்நியத் துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போராட்டம். ஒத்துழையாமை இயக்கம் போன்றவை காங்கிரசில் இருந்த போது அவர் நடத்திய போராட்டங்களாகும். இதற்காக பலமுறை சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை ராஜதானியின் காங்கிரஸ் கட்சித் தலைவராக (தற்போது தமிழ்நாடு காங்கிரஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்குள்ள சிலரின் செயல்களால் அதிருப்தியுற்ற பெயரியார், 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

சுயமரியாதை இயக்கம்

காங்கிரசிலிருந்து விலகிய பெயரியார். 1925-ம் ஆண்டு சுயமாரியதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சமூகத்தில் நிலவி வந்த மூடப்பழக்க வழக்கங்களை இந்த இயக்கம் கடுமையாக எதிர்த்தது. மக்களை அறிவின்மையில் இருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழி செய்தன.

நீதிக்கட்சி

'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' என்ற அரசியல் கட்சி 1916-ம் ஆண்டு துவங்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரிசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இக்கட்சி தோன்றியது. இதுவே, பின்னாளில் 'நீதிக்கட்சி' என பெயர் மாற்றம் பெற்றது. 1938-ம் ஆண்டு நடைெபற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் கைது செய்யப்பட்ட பெரியார், விடுதலை ஆனதும் நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால், கட்சியின் பெரும் பாலான உறுப்பினர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்ததால், பெரியாரின் தலைமையின் கீழ் செயல்பட விரும்பாமல் கட்சியிலிருந்து விலகினர்.


திராவிட கழகத்தின் தோற்றம்

1944-ம் நீதிகட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கட்சி பேரணியில் கட்சியின் பெயர் 'திராவிடர் கழகம்' எனப் பெரியாரால் மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு சிலர் எதிர்ப்பித் தெரிவித்தனர். நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான பி.டி.ராஜன் தலைமையில் மாற்று அணி தொடங்கப்பட்டது. 1957 வரை இந்த  அணி செயல்பட்டது.
திராவிடர் கழகத்தின் கொள்கை நரக மக்களிடமும் மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் அது சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிரப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவராதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தீண்டாமையை மிகத் தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. மேலும் பெண்கள், உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத் திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.


மறைவு

பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்றது.  அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக் கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டு முடித்து கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு. குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான 'பகுத்தறிவுச் சிற்பி' என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி 1973-ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி தனது 94-ம் வயதில் இயற்கை எய்தினார்.

Comments

Popular posts from this blog

காடுகள் பாதுகாப்பு

மாவீரன் பூலித்தேவன்

சுனாமி